மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சாவகச்சேரி வெடிபொருள் மீட்பின் எதிராலி – சிறிலங்கா காவல்துறையின் ஊடகப் பிரிவு முடக்கப்பட்டது

சிறிலங்கா காவல்துறையின் ஊடகப் பிரிவின் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, சட்டம் ஒழுங்கு அமைச்சு அறிவித்துள்ளது.

மகிந்தவின் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் நீக்கம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அளிக்கப்பட்டு வந்த இராணுவப் பாதுகாப்பு இன்று பிற்பகலுடன் முற்றாகவே நீக்கப்படவுள்ளதாக, கூட்டு எதிர்க்கட்சி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கில் பணியக உதவியாளர் பதவிக்கு 250 பட்டதாரிகள் விண்ணப்பம்

சிறிலங்காவில் வேலையற்றிருப்போர் எண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரித்துள்ள நிலையில், வடக்கு மாகாணசபையினால் கோரப்பட்ட பணியக உதவியாளர் பதவிக்கு, 250 பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னமும் நிறைவேற்றப்படாத சிறிலங்காவின் கடப்பாடுகள் உள்ளன – சமந்தா பவர்

சிறிலங்காவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல், மற்றும் நிலையான நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் ஆகிய விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்று தெரிவித்துள்ளார் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர தூதுவர் சமந்தா பவர்.

பரவிப்பாஞ்சான் விவகாரம்: சிறிலங்கா இராணுவம் மீதே விசாரணை நடத்த வேண்டும் – சுமந்திரன்

பரவிப்பாஞ்சான் விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதானால், பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இராணுவத்தினர் மீதே விசாரணை நடத்த வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமருடன் சம்பந்தன் சந்திப்பு – காணிகள் விடுவிப்பு, கைதுகள் குறித்து பேச்சு

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல் மற்றும் வடக்கு, கிழக்கில் திடீரென அதிகரித்துள்ள கைதுகள் தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பேச்சு நடத்தியுள்ளார்.

திருமலையில் அமெரிக்க கடற்படைத் தளம் – உடன்பாடுகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாம்

திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்கக் கடற்படையின் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம்  இரகசிய உடன்பாடுகளைச் செய்திருப்பதாக,  முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண  குற்றம்சாட்டியுள்ளார்.

சமஸ்டியை நிராகரித்தது சிறிலங்கா சுதந்திரக் கட்சி – அதுபற்றி பேச்சு நடத்தப்படாதாம்

சமஸ்டி ஆட்சிமுறைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது, அதுபற்றிப் பேச்சுக்களையும் நடத்தாது என்று, சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் இருவர் வெள்ளியன்று சிறிலங்கா வருகின்றனர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இரண்டு சிறப்பு அறிக்கையாளர்கள் இம்மாத இறுதியில், சி்றிலங்காவுக்கு உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

முன்அனுமதி பெற்றே சம்பந்தன் படைமுகாமுக்குள் செல்ல வேண்டும் – சிறிலங்கா அரசு

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் படை முகாம்களுக்குச் செல்லலாம் என்றும், ஆனால் அதற்கான முன்னறிவித்தல் வழங்கப்பட்டு அனுமதி பெற வேண்டும் என்றும், சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.