ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண்- உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள, ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், தமது தீர்ப்பை சபாநாயகருக்கு அறிவித்திருந்தது.
சபாநாயகர் இன்று நாடாளுமன்றுக்கு உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாகவும், அதற்கமைய, ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தின் 17வது பிரிவை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பொதுசன வாக்கெடுப்பை நடத்தி மக்கள் அங்கீகாரத்தையும் பெற வேண்டும் என்று கூறியுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
