அனோஜனின் விடுதலைக்காக யாழ்ப்பாணத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், பண்ணைப் பகுதியில், தன்னார்வ ரீதியாக ஒன்று திரண்ட இளையோர் மற்றும் அரசியல், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மெழுகுவர்த்தி மற்றும் சுலோக அட்டைகளை ஏந்தியபடி இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.


