மேலும்

500 ஐ எட்டும் செம்மணி மனிதப் புதைகுழி எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 ஆக அதிகரித்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுப்பதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்தநிலையில்,  நேற்று 45வது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது,  புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 5 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதன் போது, நாணயக் குற்றி ஒன்றும் சிறுவர்களின் ஆடைகளுக்குரிய பொத்தான்களும் சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், செம்மணிப் புதைகுழியில் இதுவரையில்  99 நாட்கள்  மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் மூலம்,  மொத்தம் 499 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,  494 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *