மேலும்

ஜேவிபி தலைவர்களுடன் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் சந்திப்பு

ஜேவிபி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர்களுக்கிடையில்  உயர்மட்டச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜேவிபி கட்சியின் தலைமையகத்திற்கு இந்திய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மூத்த தலைவர்களான பிரகாஷ் காரத் மற்றும் பிருந்தா காரத் ஆகியோர் நேற்று முன்தினம்  பயணம் மேற்கொண்டிருந்தனர்.

அவர்களை வரவேற்ற ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்கவும் ஆகியோர், அவர்களுடன்  கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

இதன்போது  பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *