சிறிலங்கா கடற்படையின் கஜபாகு போர்க்கப்பலில் அமெரிக்க சிறப்பு தூதுவர் ஆய்வு
சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்புத் தூதுவர், செர்ஜியோ கோர், தற்போது சிறிலங்கா கடற்படையில் பணியாற்றி வரும் முன்னைய அமெரிக்க கடலோரக் காவல்படைக் கப்பலான,எஸ்.எல்.என்.எஸ் கஜபாகுவிற்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.
அங்கு, அவர் சிறிலங்கா கடற்படைத் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு அமெரிக்காவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான கடல்சார் கூட்டாண்மையின் நீடித்த வலிமையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது, ஆழமடைந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய உறுதித்தன்மைக்கான பரஸ்பர அர்ப்பணிப்பின் சின்னமாகக் கருதப்படுகிறது என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படைக்கு, அமெரிக்க கடலோரக் காவல்படையினர் இருந்து விலக்கப்பட்ட நான்கு ரோந்துக் கப்பல்கள் இதுவரை கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
கடைசியாக வழங்கப்பட்ட கப்பல் தற்போது சிறிலங்காவை நோக்கி பசுபிக் கடலில் பயணத்துக் கொண்டிருக்கிறது.


