கொழும்பு வந்தார் வியட்நாம் அதிபர்- சிறிலங்கா நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளார்
வியட்நாம் சோசலிசக் குடியரசின் அதிபரும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலருமான, டோ லாம் சிறிலங்காவிற்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
நேற்று இரவு அவர் வியட்நாம் விமான சேவையின் சிறப்பு விமானம் மூலம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தார்.
வியட்நாம் அதிபருடன், 209 பேர் கொண்ட தூதுக் குழுவினரும் சிறிலங்கா வந்துள்ளனர்.
இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு வியட்நாம் அதிபர், மும்பையிலிருந்து கொழும்பிற்கு பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய வியட்நாம் அதிபருக்கு, சிறிலங்கா பிரதமர் ஹரினி அமரசூரிய, சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படாபெண்டி, வெளி விவகார பிரதி அமைச்சர் தஅருண் ஹேமச்சந்திரா மற்றும் வெளி விவகார அமைச்சின் அதிகாரிகளால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, வியட்நாம் அதிபர் டோ லாம் இன்று முற்பகல் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

