மேலும்

பாகிஸ்தான்- சிறிலங்கா சிறப்புப்படைகளின் கை குலுக்கல் -II கூட்டுப் பயிற்சி நிறைவு

பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா இராணுவங்களுக்கு இடையே ‘கை குலுக்கல் -II’ (Shake Hands-II) என்ற பெயரிலான,  பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப் பயிற்சி  நிறைவடைந்துள்ளது.

பாகிஸ்தானின் தர்பேலாவில் இரண்டு வாரங்கள் நீடித்த இந்தப் பயிற்சி, 2026 ஏப்ரல் 27 ஆம் நாள் ஆரம்பமாகி நேற்று நிறைவடைந்தது.

இந்தப் பயிற்சியில் பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்புச் சேவைக் குழு மற்றும் சிறிலங்கா சிறப்புப் படைகளின் குழுக்கள் பங்கேற்றிருந்தன.

பாகிஸ்தான் சிறப்புச் சேவைக் குழுவின் தளபதி, பிரதம விருந்தினராக நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் அஜித் அபேயவர்தனவும், இந்த  நிறைவு விழாவில் பங்கேற்றார்.

இந்தப் பயிற்சியின் படையினர் மிக உயர்ந்த தொழில்முறைத் திறனை வெளிப்படுத்தினர்.

கூட்டுப் பயிற்சி மூலம் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் உள்ள பயிற்சிகள், நடைமுறைகள் மற்றும் நுட்பங்களைச் செம்மைப்படுத்துவதையும், இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இராணுவ உறவுகளைப் பயன்படுத்துவதையும் நோக்கமாகக்  கொண்டு இந்த கூட்டுப் பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *