அவசர நிலை நீடிப்புக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம்
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பொதுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் கீழ் அவசர கால நிலையை நீடிக்கும் வகையில், கொண்டு வரப்பட்ட பிரேரணை, நேற்று மாலை 139 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 145 வாக்குகளும், எதிராக 6 வாக்குகளும் பதிவாகின.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், தமிழ் அரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார பொன்னம்பலம் அவசர நிலை நீடிப்பு பிரேரணை குறித்து வாக்கெடுப்பை நடத்தக் கோரியிருந்தார்.
டிட்வா புயலை அடுத்து, பேரிடரை சமாளிப்பதற்காக அவசரநிலையை அறிவித்த சிறிலங்கா அரசாங்கம்,அதனை மாதம் தோறும் நீடித்து வருகிறது.
