கொழும்பு துறைமுகத்துக்கு வர அனுமதி கோரிய ஈரானிய போர்க்கப்பல்
ஈரானின் ஐஆர்ஐஎஸ் டெனா போர்க்கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி கோரியிருந்த நிலையிலேயே, அமெரிக்க நீர்மூழ்கியினால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு சிறிலங்காவிடம் கப்பல் அனுமதி கோரியதாகவும், இராஜதந்திர பதற்றங்களுக்கு மத்தியில் கோரிக்கையை பரிசீலனை செய்யும் பணியில் சிறிலங்கா அதிகாரிகள் ஈடுபட்டிருந்தபோதே இந்த தாக்குதல் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் சிறிலங்காவுக்கு நுழைய அனுமதி கோரியதா என்பது குறித்த கேள்விக்கு கடற்படை பேச்சாளர், இந்த கட்டத்தில் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைக்குப் பின்னரே கூடுதல் விபரங்களை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
