ரஷ்ய- சிறிலங்கா தரைப்படைத் தளபதிகள் பேச்சு
ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, ரஷ்ய தரைப்படைகளின் தளபதி ஜெனரல் ஒலேக் சல்யுகோவ்வை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
மொஸ்கோவில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பில் ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவர் கலாநிதி தயான் ஜயத்திலகவும், சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டார்.
இதன்போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.