ஞானசார தேரரின் மேன்முறையீடு தள்ளுபடி – 9 மாத சிறைத்தண்டனை உறுதி
இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றத்திற்காக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத் தண்டனையை கொழும்பு மேல்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2025 ஜனவரி 1 ஆம் நாள், கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ஞானசார தேரருக்கு ஒன்பது மாத சிறைத் தண்டனையும், ரூ. 1,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தண்டனையை எதிர்த்து ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
குற்றம்சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை கொழும்பு மேல்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தண்டனையை உறுதி செய்துள்ளது.

