மேலும்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் றோகித பொகொல்லாகம கைது

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் றோகித பொகொல்லாகம இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீதான  ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, பொகொல்லாகம இன்று  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

வாக்குமூலம் பெறப்பட்டதை தொடர்ந்து,  அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் றோகித போகொல்லாகம கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *