மேலும்

செம்மணிப் புதைகுழி  குறித்த விசாரணைக்கு அனைத்துலக உதவியைப் பெற வேண்டும்

யாழ்ப்பாணம், செம்மணி கூட்டுப் புதைகுழி  குறித்து சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணையை உறுதிப்படுத்த அனைத்துலக உதவியைப் பெற வேண்டும் என சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா,

நீதியை உறுதிப்படுத்தவும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்திற்குப் பரிந்துரைகளை வழங்க முடியும்.

ஆனால் அந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்தையே சாரும்.

இது போன்ற விவகாரங்களில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து, மனித உரிமைகள் கண்ணோட்டத்தில் மக்களுக்கு அதிகபட்ச நீதியை உறுதிப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்குவதே எங்களது பணியாகும்.நாங்கள் அதைச் செய்கிறோம்.

செம்மணிப் புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தவரை,  சிறிலங்காஅரசாங்கம் அனைத்துலக உதவியைப் பெற வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.

இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.” என்றும், சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *