மேலும்

கொழும்பு துறைமுகத்தில் இத்தாலியின் விமானந்தாங்கிப் போர்க் கப்பல்

இத்தாலியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க் கப்பலான ஐரிஎஸ் ஜூசப்பே கரிபால்டி  ‘ITS Giuseppe Garibaldi’, நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

விநியோக தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

கொழும்புத் துறைமுகத்தில், கடற்படை மரபுகளுக்கமைய சிறிலங்கா  கடற்படையினர் இத்தாலிய போர்க்கப்பலை வரவேற்றனர்.

180 மீற்றர் நீளமான இந்த விமானம் தாங்கிக் கப்பலில் 550 கடற்படை மாலுமிகளும், 150 விமானப்படை பணியாளர்களும், 100 அதிகாரிகளுமாக 830 பேர் பணியாற்றுகின்றனர்.

இந்த விமானம்தாங்கிக் கப்பலில் 18 போர் விமானங்கள் மற்றும் உலங்குவானூர்திகளை நிறுத்தும் வசதிகள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *