மேலும்

மகிந்தவைச் சந்தித்தார் புதிய சீனத் தூதுவர்

சிறிலங்காவுக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang),  சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசியுள்ளார்.

கொழும்பில் உள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கடந்த ஓகஸ்ட்  25 ஆம் நாள் தனது தகுதிச் சான்றுகளைச் சமர்ப்பித்து,  சீனத் தூதுவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட வெய் ஹுவாசியாங்கிற்கு, மகிந்த ராஜபக்ச தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்  பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *