மேலும்

சிறிலங்கா- அமெரிக்க கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு

சிறிலங்கா கடற்படைக்கும் அமெரிக்க கடற்படைக்கும் இடையிலான, CARAT 2026 கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் நிறைவடைந்துள்ளது.

சம்பூரில் உள்ள சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவு தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிறைவு விழாவில், சிறிலங்கா கடற்படையின் கொமடோர் தனேஷ் பத்பேரிய மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மூத்த பாதுகாப்பு அதிகாரியும் பாதுகாப்பு தூதுவருமான லெப்டினன்ட் கேணல் மத்யூ ஹவுஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டுப் பயிற்சியானது, சிறிலங்கா  கடற்படை, கடலோரக் காவல்படை, விமானப்படை மற்றும் அமெரிக்க கடற்படை, அமெரிக்க கடலோரக் காவல்படையினரை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்டது.

கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்பு உள்ளிட்ட துறைகளில் கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *