பந்து இப்போது சிறிலங்காவிடம் – என்கிறார் ரஷ்ய தூதுவர்
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்யும் விடயத்தில் பந்து இப்போது சிறிலங்காவிடமே உள்ளதாக சிறிலங்காவுக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் ஜகரியன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்யும் விடயத்தில் பந்து இப்போது சிறிலங்காவிடமே உள்ளதாக சிறிலங்காவுக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் ஜகரியன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு நேற்று முதன்முறையாக அமெரிக்க மசகு எண்ணெய் வந்து சேர்ந்துள்ளது. இது எரிபொருள் விநியோகத்தை நிலைப்படுத்தியுள்ளதாக, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர், எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, ரஷ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளரும், ரஷ்ய கூட்டமைப்பின் அரச ஆலோசகருமான அலெக்சாண்டர் நிகோலாயெவிச் வெனடிக்டோவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த மொஸ்கோவில் இன்று ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் வாசிலி ஒஸ்மாகோவை (Vasily Osmakov) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்காப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்குவதற்காக, கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் சீனா களஞ்சியங்களை நிறுவியிருந்ததாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அமெரிக்க திறைசேரி ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு மே 16ஆம் நாள் வரை வழங்கியுள்ள, விலக்கைப் பயன்படுத்தி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் உரத்தை கொள்வனவு செய்ய சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இருந்து எண்ணெய் விநியோகத்தைத் தொடங்குவது தொடர்பாக ரஷ்யாவுடன் அரசியல் மட்டத்திலான உடன்பாட்டை எட்டியுள்ளதாக, சிறிலங்கா போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிய அணுமின் நிலையத்தை அமைப்பது தொடர்பான ரஷ்யாவின் முன்மொழிவை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு விலக்குப் பெறுவதற்காக சிறிலங்கா விடுத்த கோரிக்கைக்கு, அமெரிக்கா இன்னமும் பதிலளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு, சீனா முன்வந்துள்ளது.