மேலும்

எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு- சிறப்பு நிரந்தர நீதிமன்றம் நியமனம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக, சிறிலங்கா பிரதம நீதியரசர், சிறப்பு நிரந்தர ட்ரயல்  அட் பார்  அமர்வை நியமித்துள்ளார்.

இந்த சிறப்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள்  குழுவில், நீதிபதிகளான நயன செனவிரத்ன, நளின் ஹேவவாசம் மற்றும் லக்மாலி ஹேவவாசம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் இரவு காணாமல் ஆக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று 16 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அவரது நிலை  குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *