மேலும்

செம்மணியில் மற்றொரு மனித எலும்புக்கூடு மீட்பு

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் நான்காவது நாள் அகழ்வுப் பணி நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பதின்ம வயதுடையவரது என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடு ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கறுப்பு நிறத்தில் வித்தியாசமான மண் படுக்கை அரிந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போது,  அதிலிருந்து நாணயக் குற்றி ஒன்றும் அடையாளம் காணப்பட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து  இதுவரை 241 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் 240 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இன்று ஐந்தாவது நாளாக அகழ்வுப்பணி இடம்பெறுகிறது. இன்று மதியம் வரை இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படம்- பிரபாகரன் டிலக்சன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *