மேலும்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து மைத்ரிபால சிறிசேனவுக்கு முன்னரே தெரியும்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு முன்னரே தெரியும் எனத் தாம் நம்புவதாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுப்பதில் கடமையில் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பான நீதிமன்ற விசாரணையில் சாட்சியமளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அப்போதைய அதிபரும், பாதுகாப்பு அமைச்சரும், முப்படைகளின் தளபதியுமாக இருந்தவருமான மைத்ரிபால சிறிசேனவுக்கு இந்த புலனாய்வுத் தகவல் தெரிந்திருந்தது என தாம் நம்புவதாக ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அப்போதைய அரச புலனாய்வு சேவை தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கும் இந்தத் தகவல் தெரிந்திருந்ததாகவும், அதை மறைக்க அவர் செயற்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

“பாதுகாப்பு அமைச்சராகவும், ஆயுதப் படைகளின் தலைவராகவும் இருந்த அதிபர் மைத்ரிபால சிறிசேன நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.

மிக மூத்த அதிகாரி என்ற முறையில், நான் இந்த வழக்கில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளேன்.

நான் அளித்த தகவல்கள் முறையாக ஆராயப்பட்டிருந்தால், என் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்காது.

இதற்குப் பொறுப்பானவர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்,” என்றும் ஹேமசிறி பெர்னான்டோ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *