மேலும்

286 டொலருக்கு டீசல் வாங்கியதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உறுதி

ஒரு பீப்பாய் டீசல் 286 அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டதை, சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதி செய்துள்ளது.

மசகு எண்ணெயோ அல்லது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளோ அதிக விலையில் கொள்வனவு செய்யப்படவில்லை என்று சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

பொதுவாக, உலகளாவிய அளவுகோல்களின்படி, மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டொலருக்கும் அதிகமாகவும், சுத்திகரிக்கப்பட்ட டீசல் விலை 200 அமெரிக்க டொலருக்கு அதிகமாகவும் இருக்கும்.

எச்எஸ்பிசி-யின் உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரியின் கருத்து  தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்துலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்  71 அமெரிக்க டொலர் முதல் 113 அமெரிக்க டொலர் வரையிலான வரம்பிற்குள்ளேயே கொள்வனவு செய்யப்பட்டது என்றும், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *