நாளை கொழும்பு வருகிறது இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சார்தா
இந்திய கடற்படையின் கடலோர ரோந்துக் கப்பலான ஐஎன்எஸ் சார்தா, நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
செயல்பாட்டு சீரமைப்புப் பணியின் ஒரு பகுதியாக, ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினருக்காக, இந்திய இராணுவத்தினால் வழங்கப்படும் பொருட்களை ஏற்றிக் கொண்டு, சுகன்யா வகையை சேர்ந்த இந்தக் கப்பல், நாளை முதல், 13 ஆம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 16 ஆம் நாள், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நடைபெறும் ஒரு விழாவில் இந்தப் பொருட்கள் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும்.
ஐஎன்எஸ் சார்தா கப்பலின் குழுவினர் சிறிலங்கா கடற்படையினருடன் தொழில்முறைப் பரிமாற்றங்கள் மற்றும் நட்புரீதியான விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்கவுள்ளதுடன், அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு, சிறிலங்கா கடற்படையினருடன், ஒரு கூட்டு யோகா நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளனர்.
