மேலும்

இரண்டு மாதங்களுக்குள் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ரத்துச் செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று பயங்கரவாத தடைச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டிய நிலையிலும், அதனை முழுமையாக ரத்துச் செய்ய வேண்டும் என தமிழ் உறுப்பினர்கள் பலரும் கோரிய நிலையிலும், சிறிலங்கா நீதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவு ஒன்றை முன்மொழிந்திருந்தது.

அது ஆபத்தான பல பிரிவுகளை உள்ளடக்கியிருப்பதாக சட்ட நிபுணர்கள், மனித உரிமை அமைப்புகள், சிவில் செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *