மேலும்

அணுமின் நிலையத்தை அமைக்கும் ரஷ்யாவின் முன்மொழிவு – சிறிலங்கா நிராகரிப்பு

சிறிய அணுமின் நிலையத்தை அமைப்பது தொடர்பான ரஷ்யாவின் முன்மொழிவை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அண்மையில் சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய வெளியுறவு பிரதி அமைச்சர் அன்ட்ரே ருடென்கோ,  ஒரு சிறிய மட்டுப்படுத்தப்பட்ட அணுமின் நிலையத்தை அமைப்பதில் சிறிலங்கா ஆர்வம் காட்டினால் அதுகுறித்த  பேச்சுக்களைத்  தொடங்கலாம் என்று கூறியிருந்தார்.

எனினும், எரிசக்தித்துறையில் அணுசக்தியைப் பயன்படுத்துவம் ரஷ்யாவின் இந்த  முன்மொழிவை சிறிலங்கா நிராகரித்துள்ளது.

சிறிய அணுமின் நிலையத்தை அமைப்பது குறித்து சிறிலங்காவுடன் ரஷ்யா பல ஆண்டுகளாகப் பேச்சுக்களை  நடத்தி வருகிறது.

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வது குறித்து கலந்துரையாடுவதற்காக மார்ச் மாத தொடக்கத்தில் சிறிலங்கா வெளிவிவகார  அமைச்சர் விஜித ஹேரத்,  ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகரியனைச் சந்தித்த போதும், அணுசக்தித் தேர்வு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

2023-ஆம் ஆண்டில், சிறிலங்காவில் கடலிலோ அல்லது தரையிலோ ஒரு அணுமின் நிலையத்தை அமைப்பது குறித்த ரஷ்யாவின் முன்மொழிவு பற்றி அணுசக்தி அதிகாரசபை கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *