மேலும்

புதன்கிழமை விடுமுறையை ரத்து செய்தது சிறிலங்கா அரசு

அரச பணியகங்களுக்கு புதன்கிழமை தோறும் அறிவிக்கப்பட்ட  விடுமுறையை, ஏப்ரல் 8 ஆம் நாள் முதல் ரத்து செய்வதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரின் தலைமை அதிகாரியும், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமுமான பிரபாத் சந்திரகீர்த்தி வெளியிட்ட இந்த உத்தரவில், வாரத்தின் நடுவில் விடுமுறை அளிக்கும் விதிமுறை, ஏப்ரல் 8 முதல்  நடைமுறையில் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் செயல்பாடுகளைச் சீரமைப்பதையும், தடையற்ற பொதுச் சேவை வழங்கலை உறுதி செய்வதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து, வாரத்தின் புதன்கிழமைகளில் அரச பணியகங்களை மூடிவதற்கு அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *