மேலும்

துறைமுக நகரில் முதலீடு செய்ய ரஷ்யாவை அழைக்கும் சிறிலங்கா

கொழும்பு துறைமுக நகரில் முதலீடு செய்வதற்கான சாத்தியங்களை ஆராயுமாறு, ரஷ்ய வெளியுறவு அமைச்சிடம் சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுக்கவுள்ளது.

உயர்மட்டப் பேச்சுக்களுக்காக ரஷ்யாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் அண்ட்ரே ருடென்கோ ஏப்ரல் 2 ஆம் திகதி சிறிலங்காவுக்கு வருகை தருவார் என்றும்,  இதன்போது, ரஷ்யாவும் சிறிலங்காவும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொருளாதாரம், வர்த்தகம், கலாசாரம் மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை நாடுவதும் இதில் அடங்கும்.

ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சரின் இந்தப் பயணத்தில் எரிபொருள் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறாது, ஆனால் இது ஒரு அரசியல் பயணமாக இருக்கும்.

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் பல பிற துறைகளில் முதலீடுகள் உட்பட பல்வேறு ஒத்துழைப்புப் பகுதிகளை நாங்கள் ஆராய்வோம், என்றும் அரசாங்க வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *