மேலும்

மாதம்: January 2026

சிறிலங்காவுக்கு 100 மின்சார சொகுசு பேருந்துகளை வழங்குகிறது சீனா

மின்சாரத்தால் இயங்கும் 100 நவீன சொகுசு பேருந்துகளை சிறிலங்காவுக்கு, சீனா விரைவில் வழங்கவுள்ளதாக, சீனத் தூதுவர் கி சென்ஹொங், தெரிவித்துள்ளார்.

பூகோள ஊழல்  தரவரிசையில் சிறிலங்காவுக்குப் பெரும் பின்னடைவு

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு கோசங்களுக்கு மத்தியில், சிறிலங்கா பூகோள ஊழல்  தரவரிசைப் பட்டியலில், சிறிலங்கா பின்னடைவைச் சந்தித்துள்ளது.

நாமல் தலைமையிலான பொதுஜன பெரமுன குழுவினர் இந்தியாவுக்கு அழைப்பு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தலைமையிலான, சிறிலங்கா  பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் குழுவொன்று இந்தியாவின் குடியரசு நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக ஒடிசாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

வடக்கில் பௌத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கடிதம் – சிஐடி பரிசீலனை

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்துக்கள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக குற்றம் சாட்டி ‘மக்கள் போராட்ட குடிமக்கள்’ அமைப்பு, அனுப்பிய கடிதம்,  குற்றப் புலனாய்வுப் பிரிவினரின்  பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக நாணய நிதிய குழு இன்று சிறிலங்கா பயணம்

டிட்வா சூறாவளியினால்  ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக, அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று  சிறிலங்காவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

சிங்கப்பூர் அதிபர், அனைத்துலக நிறுவனங்களின் தலைவர்களுடன் ஹரிணி சந்திப்பு

உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்பதற்கு சுவிட்சர்லாந்தின்  டாவோஸ் நகருக்கு சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய,  பல்வேறு அனைத்துலக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

5 புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்

சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க – சிறிலங்கா உறவுகளை மறுசீரமைப்பாரா எரிக் மேயர்?

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவரான எரிக் மேயர், செனட் வெளியுறவுக் குழுவின் முன் சாட்சியமளித்த போது, சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பை வெளிப்புற செல்வாக்கிலிருந்து பாதுகாக்க கொழும்பு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார்.

இந்தியப் பெருங்கடல் கடலோர கூட்டணியில் இணைகிறது சிறிலங்கா

இந்தியப் பெருங்கடல் கடலோர கூட்டணியை (Indian Ocean Coastal Alliance) உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடுவதற்கு, அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்காவில் விவசாயத்துறையில் முதலீடு செய்ய சீனா திட்டம்

சிறிலங்காவில் பால் பண்ணை மற்றும் ஏற்றுமதி சார்ந்த விவசாயத்துறைகளில் முதலீடுகளைச் செய்வதற்கான திட்டத்தை, சீனா முன்வைத்துள்ளது.