அனைத்துலக நாணய நிதிய குழு இன்று சிறிலங்கா பயணம்
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக, அனைத்துலக நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று சிறிலங்காவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்தக் குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார உறுதிதன்மை மீது, பேரிடர் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து ஆராயத் திட்டமிட்டுள்ளது.
அனைத்துலக நாணய நிதியத்தின் இந்தக் குழுவினர், ஜனவரி 28 ஆம் நாள் வரை, சிறிலங்காவில் தங்கியிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சிறிலங்காவுக்கான அனைத்துலக நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் அடுத்த கட்ட நிதி தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
