சிறிலங்காவுக்கு 100 மின்சார சொகுசு பேருந்துகளை வழங்குகிறது சீனா
மின்சாரத்தால் இயங்கும் 100 நவீன சொகுசு பேருந்துகளை சிறிலங்காவுக்கு, சீனா விரைவில் வழங்கவுள்ளதாக, சீனத் தூதுவர் கி சென்ஹொங், தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழங்க திட்டமிடப்பட்டுள்ள பேருந்து ஒவ்வொன்றும் சுமார் 225,000 அமெரிக்க டொலர் பெறுமதியானவை என்றும், சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று, மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே சிறி சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட சிறி ஞானரதன தேரர் ஆகியோரைச் சந்தித்த போதே, கீ சென்ஹொங் இதனைக் கூறியுள்ளார்.
