சிங்கப்பூர் அதிபர், அனைத்துலக நிறுவனங்களின் தலைவர்களுடன் ஹரிணி சந்திப்பு
உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்பதற்கு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய, பல்வேறு அனைத்துலக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் டாவோஸ் சென்றடைந்த சிறிலங்கா பிரதமர் மாநாட்டின் பக்க நிகழ்வாக, அங்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் அனைத்துலக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து, சிறிலங்காவில் முதலீடு செய்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராய திட்டமிட்டிருந்தார்.
இந்த பயணத்தின் போது அவர், ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் மசாடோ கான்டா (Masato Kanda), அனைத்துலக நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva), ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதி அலெக்சாண்டர் டி குரூ (Alexander De Croo) ஆகியோரை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினத்துடனும் சிறிலங்கா பிரதமர் சந்திப்பை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்புகளின் போது இருதரப்பு விவகாரங்கள் மற்றும் முதலீடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.
அனைத்துலக தலைவர்களை சந்திக்கும் சிறிலங்கா பிரதமரின் திட்டம் பெருமளவில் வெற்றி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.




