சிறிலங்காவில் விவசாயத்துறையில் முதலீடு செய்ய சீனா திட்டம்
சிறிலங்காவில் பால் பண்ணை மற்றும் ஏற்றுமதி சார்ந்த விவசாயத்துறைகளில் முதலீடுகளைச் செய்வதற்கான திட்டத்தை, சீனா முன்வைத்துள்ளது.
சீன வர்த்தக சபை பிரதிநிதிகள், பத்தரமுல்லையில் சிறிலங்காவின் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்தாவுடன் நடத்திய சந்திப்பின் போது, இந்த திட்டத்தை சமர்ப்பித்துள்ளனர்.
சிறிலங்கா அதிபர் செயலகத்திற்கும் இந்த திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்படாத அரசு நிலங்களைப் பயன்படுத்தி – பெரியளவிலான பால் பண்ணைகளை உருவாக்குதல் மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் நோக்கில் மரக்கறிகள் மற்றும் பழங்களை பயிரிடுவதற்கான திட்டங்களில் முதலீடு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.
காணி ஆணையர் நாயகம் திணைக்களம், நில சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழ் உள்ள நிலங்களில் இந்த முதலீடுகளை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
