வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக தவமலர் சுரேந்திரநாதன் தெரிவு
வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக தமிழ்த் தேசிய பேரவை சார்பில் முன்னிறுத்தப்பட்ட தவமலர் சுரேந்திரநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 8.30 மணியளவில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
தவிசாளர் பதவிக்கு தமிழ் தேசிய பேரவை சார்பில் ஓய்வுபெற்ற அதிபர் தவமலர் சுரேந்திரநாதனும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் சட்டத்தரணி மகாலிங்கம் மயூரனும் முன்னிறுத்தப்பட்டனர்.
இதையடுத்து இடம்பெற்ற பகிரங்க வாக்கெடுப்பில், தவமலர் சுரேந்திரநாதன் 7 வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
மகாலிங்கம் மயூரனுக்கு 6 வாக்குகள் கிடைத்த நிலையில், 3 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.