போர் தொடர்பான மற்றொரு நூல் கொழும்பில் வெளியீடு
“சிறிலங்காவில் பிரிவினைவாத தீவிரவாதம் 1975–2009″ என்ற நூல் நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் உள்நாட்டு போர் பற்றிய விரிவான பகுப்பாய்வை இந்த நூல் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித் தமிழீழ அரசுக்கான போராட்டம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் வகித்த பங்கு குறித்து இந்த நூலில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நூலை சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க மற்றும் மேஜர் சரத் ஜெயவர்தன ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
சிங்களத்தில் வெளியாகியுள்ள இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதிகள், இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.