கஜேந்திரகுமார்- சுமந்திரன் நாளை சந்திப்பு- ஆட்சியமைப்பது குறித்து பேச்சு
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து, தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையில் நாளை சந்திப்பு இடம்பெறவுள்ளது.
வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று நடந்த ஊடகச் சந்திப்பில், தமிழ் தேசிய பேரவையின் பங்காளிக் கட்சியான தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உள்ளூராட்சி சபையில் ஆட்சியமைப்பது தொடர்பாக பேச்சு நடத்த விரும்புவதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பேச்சுக்கள் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும் எதிர்பார்ப்பதாகவும், இந்தப் பேச்சுக்கள், தமிழ் அரசுக் கட்சி, தமிழ் தேசிய பேரவை ஆகியவற்றுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியையும் உள்ளடக்கிய பரந்துபட்ட ஒரு அணியாக வலுப்பெற வேண்டும் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.