மேலும்

சீனாவுடன் உடன்பாட்டில் கையெழுத்திட அமைச்சரவை அனுமதி

இருதரப்பு ஒத்துழைப்பு மூலம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவது தொடர்பாக, சீனாவும் சிறிலங்காவும் இந்த வாரம் உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளன.

வரும் வெள்ளிக்கிழமை சீனாவின் வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ (Wang Wentao) சிறிலங்காவுக்கு வரவுள்ள நிலையில், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் சுமூகமான இருதரப்பு வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக, குழுவைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக, சிறிலங்கா அமைச்சரவை பேச்சாளர்  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இருதரப்பு வர்த்தகத்தில் பயன்படுத்தப்படாத வாய்ப்புக்களை கண்டறிதல், வர்த்தகம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வது, அத்துடன் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் அளவை அதிகரித்தல் மற்றும் அதன் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாடுகளின் வர்த்தக அமைச்சுக்களுக்கும் இடையில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *