வடக்கு காணிகளை அபகரிக்கும் அரசிதழை மீளப்பெற்றது சிறிலங்கா அரசு
வடக்கு மாகாணத்தில் 5,940 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் வகையில், கடந்த மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசிதழை, சிறிலங்கா அரசாங்கம் மீளப் பெற்றுள்ளது.
வடக்கு மாகாணத்தில் 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதங்களுக்குள் பதிவு செய்து கொள்வதற்கு காலஅவகாசம் வழங்கி இந்த அரசிதழ் வெளியிடப்பட்டது.
அவ்வாறு பதிவு செய்யப்படாத காணிகள், அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படும் என்றும், 2430 ஆம் இலக்க அரசிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
இந்த அரசிதழை ரத்துச் செய்யக் கோரி,சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசநாயக்கவுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
இன்றைக்குள் தீர்வு வழங்கப்படா விட்டால், நாளை பாரிய போராட்டம் நடத்தப் போவதாக தமிழரசுக் கட்சி எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் குறித்த அரசிதழை அரசாங்கம் மீளப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.