மேலும்

வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் உள்ளது- ஜெனரல் சவேந்திர சில்வா வேதனை

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் தடைகள் வெளிநாடுகளுக்கான தனது பயணங்களைத் தடுத்து விட்டதாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2020  பெப்ரவரியில், என் மீதும்,  மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மீதும் விதிக்கப்பட்ட அமெரிக்க பயணத் தடை மற்றும் இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட பிரித்தானியாவின் தடை நடவடிக்கைகள்,  தெற்காசியாவுக்கான எனது வெளிநாட்டுப் பயணங்களையும் கட்டுப்படுத்தியுள்ளன.

2009 முதல் அடுத்தடுத்த வந்த அரசாங்கங்கள் ஆதாரமற்ற போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு தவறி விட்டன.

அவர்களின் தோல்வி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுத்த மூத்த அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச தண்டனை நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது.

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் (57வது டிவிசன்), ஜெனரல் கமல் குணரத்ன (53வது டிவிசன்), மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த (59வது டிவிசன்), மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா (55வது டிவிசன்) மற்றும்  மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே  போன்ற, அதிரடிப் படைகளுக்குத் தலைமை தாங்கிய இராணுவத் தளபதிகள் சர்வதேச தண்டனை நடவடிக்கைகளை எதிர்கொண்டனர்.

போரை முடிவுக்குக் கொண்டுவர ஆயுதப்படைகளும் காவல்துறையும் மிகப் பெரிய விலையைக் கொடுத்துள்ளன.

இந்தப் போரை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்று பலர் நம்பினர்.போர் வெற்றி கொள்ளப்பட்டதை கொண்டாடுவது அவசியம்.

முதலாம் உலகப் போர் மற்றும்  இரண்டாம்  உலகப் போர்  தொடர்பான நிகழ்வுகள் இன்னும் சிறிலங்காவில் நடைபெற்று வரும் நிலையில்,  சிறிலங்கா இராணுவத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தை ஒழிப்பது அபத்தமானது என்றும்  ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *