ராஜபக்சவினரின் ஏற்பாட்டில் நாளையும் தனியாக போர் வெற்றி விழா
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதைக் கொண்டாடும் நிகழ்வு ஒன்று நாளையும் கொழும்பில்நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகிலுள்ள போர்வீரர் நினைவுச்சின்னத்தின் முன்பாக, நாளை இந்த நிகழ்வு நடைபெறும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் ஏற்பாடு செய்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர்களான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
முன்னாள் அதிபர்களான ரணில் விக்கிரமசிங்க மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரும் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.