தமிழின அழிப்பு நினைவு நாள் – பிரித்தானியப் பிரதமரின் செய்தி
தமிழின அழிப்பின் 16வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சிறிலங்காவில் மோதல்கள் முடிவுக்கு வந்ததன் ஆண்டு நிறைவை இன்று நாம் அனுசரிக்கிறோம்.
சிறிலங்கா போரில் கொல்லப்பட்ட மற்றும் பரவலான மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்களை நினைவுகூரும் வகையில், சிறிலங்காவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களும், பிற சமூகங்களும் ஒன்றுகூடுகிறார்கள்.
தமிழர்களையும் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவுகூருவதில் நான் உங்களுடன் இணைகிறேன்.
அட்டூழியங்களின் நினைவுகள் மற்றும் விளைவுகளுடன், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் நிற்கிறேன்.
சமூகங்கள் ஒன்றிணைந்து முன்னேறுவதற்கு, கடந்த கால அட்டூழியங்களை ஒப்புக்கொள்வதும் பொறுப்புக்கூறுவதும் அவசியம் என்பதை நாங்கள் அறிவோம்.
இந்த முறை, குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு நான் எழுதினேன்.
எனவே, இந்த நோக்கத்தை ஆதரித்து, போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்கள் மீது அண்மையில், இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நீதி மற்றும் அமைதியைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த புனிதமான நாள் நினைவூட்டுகிறது.
நீடித்த நல்லிணக்கம் மற்றும் உறுதித்தன்மையை அடைய சிறிலங்காவில் புதிய அரசாங்கத்துடனும், வடக்கில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களுடனும் நாங்கள் ஆக்கபூர்வமாகச் செயற்படுகிறோம் என்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.