மேலும்

மாதம்: December 2019

ஆட்சி மாறியதால் முடங்கியுள்ள பலாலி விமான நிலைய கட்டுமானப் பணிகள்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் முடங்கிப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முடிவுக்கு வந்தது இந்திய- சிறிலங்கா படைகளின் மித்ரசக்தி-7 கூட்டுப் பயிற்சி

இந்திய – சிறிலங்கா இராணுவத்தினர் கூட்டாக மேற்கொண்டு வந்த மித்ரசக்தி -7 இராணுவ கூட்டுப் பயிற்சி நேற்று நிறைவடைந்தது.

சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்கா தொடர்ந்து பயிற்சி

ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர், சிறிலங்கா கடற்படையின் முதலாவது குழுவுக்கு அமெரிக்க கடற்படையினர் சிறப்புப் பயிற்சிகளை அளித்துள்ளனர்.

சிரியாவில் கையாண்ட உத்திகள் – சிறிலங்கா படையினருக்கு விளக்கிய ரஷ்ய நிபுணர்கள்

சிரியாவில் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போரில், ரஷ்ய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட வான் பாதுகாப்பு, நடவடிக்கைகள் மற்றும், போர் பொறியியல் நடவடிக்கைகள் குறித்து ரஷ்ய இராணுவ நிபுணர்கள் சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளனர்.

பிறரின் ஆதிக்கத்தை நிராகரிக்கிறோம் – ஜப்பானிடம் கூறிய கோத்தா

உலக வல்லரசுகளுக்கிடையிலான போட்டிகளில் ஈடுபட சிறிலங்கா விரும்பவில்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ள சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, “நாங்கள் நட்பை நாடுகிறோம், மற்றவர்களின் ஆதிக்கத்தை நிராகரிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த தகவல்களை அம்பலப்படுத்திய இருவர் கைது

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்திய இரண்டு பேர் நேற்றிரவு குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தலுக்கு ஆதாரம் இல்லை – சிஐடி

சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கார்னியர் பனிஸ்டர்  பிரான்சிஸ் கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்னவிடம், குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நிசாந்த சில்வாவை நாடு கடத்துமாறு கோரவுள்ள சிறிலங்கா

முன்னறிப்பு இல்லாமல் சுவிற்சர்லாந்துக்குத் தப்பிச் சென்ற குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரி நிசாந்த சில்வாவை நாடு கடத்துவது குறித்து கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்துடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விரைவில் பேச்சுக்களை நடத்தவுள்ளது.

அமெரிக்காவுடனான உடன்பாடுகள் மீளாய்வு – சட்டமா அதிபர் அறிவிப்பு

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அமெரிக்காவுடனான எம்சிசி, சோபா, அக்சா உடன்பாடுகளை மீளாய்வு செய்யப் போகிறது என்றும், இவற்றை மீளாய்வு செய்யும் வரை, இந்த உடன்பாடுகளில் கையெழுத்திடாது என்றும் சட்டமா அதிபர் உச்சநீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

எம்சிசி உடன்பாடு குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடவில்லை – டலஸ்

அமெரிக்காவின் எம்சிசி கொடை தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என்று, இணை அமைச்சரவைப் பேச்சாளரும் கல்வி அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.