முடிவுக்கு வந்தது இந்திய- சிறிலங்கா படைகளின் மித்ரசக்தி-7 கூட்டுப் பயிற்சி
இந்திய – சிறிலங்கா இராணுவத்தினர் கூட்டாக மேற்கொண்டு வந்த மித்ரசக்தி -7 இராணுவ கூட்டுப் பயிற்சி நேற்று நிறைவடைந்தது.
புனேயில் உள்ள அருந்த் இராணுவ மையத்தில், இந்தக் கூட்டுப் பயிற்சி டிசெம்பர் 1ஆம் நாள் ஆரம்பித்து, 14 நாட்களாக இடம்பெற்று வந்தது.
சிறிலங்கா இராணுவத்தின் கெமுனு காவல்படையைச் சேர்ந்த 120 படையினர், இந்திய இராணுவத்தினருடன் கூட்டாகப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
நிறைவு நாளான நேற்று, கூட்டு ஒத்திகைப் பயிற்சிகள் இடம்பெற்றன.
இதில் இந்திய, சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகள் பார்வையாளர்களாகப் பங்கேற்றிருந்தனர்.