மேலும்

சிரியாவில் கையாண்ட உத்திகள் – சிறிலங்கா படையினருக்கு விளக்கிய ரஷ்ய நிபுணர்கள்

சிரியாவில் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போரில், ரஷ்ய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட வான் பாதுகாப்பு, நடவடிக்கைகள் மற்றும், போர் பொறியியல் நடவடிக்கைகள் குறித்து ரஷ்ய இராணுவ நிபுணர்கள் சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளனர்.

சிறிலங்கா வந்துள்ள ரஷ்ய இராணுவ நிபுணர்கள், சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு,சிரியாவில் தமது போர் நடவடிக்கை அனுபவங்களை விளக்கி வருகின்றனர்.

சிரியாவில் தாம் மேற்கொண்ட தாக்குதல் மற்றும் தற்காப்புக்கான வான் பாதுகாப்பு, நடவடிக்கைகள் மற்றும், போர் பொறியியல் நடவடிக்கைகள் தொடர்பான விரிவான விளக்கவுரைகளை அவர்கள் சிறிலங்கா படையினருக்கு அளித்துள்ளனர்.

ரஷ்ய இராணுவத்தின் பொறியியல் பிரிவு தலைவர் லெப். ஜெனரல் Iurri Stavitskii தலைமையிலான குழுவினர் சிறிலங்கா வந்து விளக்கங்களை அளித்துள்ளனர்.

இவர்கள் திருகோணமலை, வன்னி உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்றுள்ளதுடன், கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினருக்கு புதிய உத்திகள், தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கமளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *