மேலும்

மாதம்: November 2019

அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டேன் – கோத்தா

அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு தான் ஒருபோதும் அடிபணியமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கம் இல்லை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

நாட்டின் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கம் தற்போதைய அரசாங்கத்துக்குக் கிடையாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் றிசாத் பதியுதீனின் வாகனம் மீது தாக்குதல்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான றிசாத் பதியுதீன் பயணம் செய்த வாகனம் மீது, புத்தளத்தில் தாக்குதல்  நடத்தப்பட்டுள்ளது.

கோத்தா – மோடி சந்திப்பில் ‘13’ குறித்துப் பேசப்படாது?

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் 29ஆம் நாள் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, 13ஆவது திருத்தச்சட்டம் குறித்து கலந்துரையாடப்படமாட்டாது என்று தகவல்கள் கூறுகின்றன.

சஜித்தை எதிர்க்கட்சித் தலைவராக முன்மொழியவில்லை – சம்பந்தன்

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு வழி விட்டு ஒதுங்கிக் கொள்ளுமாறு, ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியதாக  வெளியான செய்திகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார்.

சொந்த வீட்டிலேயே தங்கியிருக்கப் போகும் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, தமது பதவிக்காலத்தில் அதிகாரபூர்வ வதிவிடமான, அதிபர் மாளிகையிலோ அல்லது வேறு அரசாங்க வதிவிடங்களிலோ குடியேறுவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.

எம்சிசி கொடை உடன்பாடு சாத்தியமில்லை

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்தின்  கொடையை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் கோருவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஏப்ரல் அல்லது மே மாதமே நாடாளுமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல் பெரும்பாலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு அமைச்சர் இல்லாத சிறிலங்கா

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச  புதிய அமைச்சரவையை அமைத்துள்ள போதும், பாதுகாப்பு அமைச்சராக எவரையும் இன்னமும் நியமிக்கவில்லை.

ஐதேக அரசினால் வழங்கப்பட்ட 7000 நியமனங்கள், கடன் திட்டங்கள் இடைநிறுத்தம்

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த சலுகைக் கடன் திட்டங்கள், 7000 பேருக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க நியமனங்களை இடைநிறுத்தி வைக்குமாறு சிறிலங்காவின் புதிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.