மேலும்

நாள்: 12th November 2019

5 மில்லியன் டொலர் கையூட்டு பெற்றதை மறுப்பாரா மகிந்த? – சம்பிக்க சவால்

சிறிலங்காவின் முன்னாள் அதிபரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச, ஷங்ரி-லா பேரத்தின் போது, 5 மில்லியன் டொலர் (900 மில்லியன் ரூபா) கையூட்டுப் பெற்றதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கை வைக்கமாட்டேன்- சஜித் உறுதி

தாம் ஆட்சிக்கு வந்தால் எந்தவொரு சூழ்நிலையிலும், பயங்கரவாத தடைச்சட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யப் போவதில்லை என்று, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சஜித்தின் பரப்புரை மேடையில் சுயேட்சை வேட்பாளர் இலியாஸ்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும், இலியாஸ் நேற்று புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் மேடையில் ஏறி ஆதரவு தெரிவித்தார்.

‘கோத்தா இன்னமும் அமெரிக்கரே – வென்றாலும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்’

சிறிலங்கா  பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச இன்னமும் அமெரிக்க குடிமகனாகவே இருக்கிறார் என்று, சட்டவாளர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

வசந்த கரன்னகொட உள்ளிட்ட 14 கடற்படையினருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

கொழும்பில் 2008-09 காலப்பகுதியில் 11 பேர் கடத்தப்பட்டு, கப்பம் பெறப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடங்கியது யாழ். – சென்னை விமான சேவை

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கான முதலாவது பயணிகள் விமான சேவை நேற்று ஆரம்பமாகியது.