மேலும்

நாள்: 3rd November 2019

அதிபர் தேர்தல் – தமிழ்க் கட்சிகளின் ஆதரவு யாருக்கு?

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டோ இன்னமும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. எனினும், சஜித் பிரேமதாசவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

நாடாளுமன்றில் கடைசி உரை – ‘குண்டு’ போடப் போகும் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எம்சிசி உடன்பாடு கையெழுத்திடப்படுவது சந்தேகமே – அமெரிக்க அதிகாரி

சிறிலங்காவில் எம்சிசி உடன்பாடு குறித்து பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்படுமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது என்று, மிலேனியம் சவால் நிறுவனத்தின் சிறிலங்காவுக்கான பணிப்பாளர் ஜென்னர் எடெல்மன் தெரிவித்துள்ளார்.

சந்திரிகாவை வெளியேற்ற அவசரமாக மத்திய குழுவை கூட்டுகிறார் மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் காப்பாளராக உள்ள, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவை, அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருகோணமலை கடற்படைத் தளத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி

கொழும்பில் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 பேரும், கடைசியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த திருகோணமலை கடற்படைத் தளத்தில் விசாரணைகளை நடத்துவதற்கு,  குற்ற விசாரணைப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பின்கதவால் நாடாளுமன்றம் நுழைகிறார்  மைத்திரி?

சிறிலங்கா அதிபர் பதவியில் இருந்து விலகிய பின்னர், அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமன உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் நுழையவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.