மேலும்

நாள்: 6th November 2019

ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் பெருமாள் இயற்கை எய்தினார்

ஈழத்து ஊடகத்துறையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான, சி.பெருமாள், யாழ்ப்பாணத்தில் நேற்று தனது 86ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

எம்சிசிக்கு எதிரான உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் பௌத்த பிக்கு

அமெரிக்காவுடன் எம்சிசி கொடை உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த பௌத்த பிக்கு, நேற்றிரவு தமது போராட்டத்தைக் கைவிட்டார்.

சிறிலங்கா அதிபர் தேர்தல்- ரெலோவின் முடிவு இன்று

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக பெரும்பாலான கட்சிகள் முடிவெடுத்து விட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான, ரெலோ இன்று தமது முடிவை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

சஜித்துக்கு ஆதரவளிக்க புளொட் முடிவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான, புளொட் முடிவு செய்திருப்பதாக, அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களை ஏமாற்றி சமஷ்டியை பெற முனைகிறார் சுமந்திரன் – மகிந்த

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சிங்கள  மக்களை  ஏமாற்றி  தமிழ் மக்களுக்கு  சமஷ்டி ஆட்சியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றார். அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று,  பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாருக்கு வாக்கு?- தமிழ் மக்களையே முடிவெடுக்கக் கோருகிறார் விக்னேஸ்வரன்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை தமிழ் மக்கள் கடந்த கால வரலாறு மற்றும் தற்போதைய அக, புற சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, முடிவெடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என, தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ரெலோ, புளொட் ரணிலைச் சந்திக்கவில்லை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்ததாக வெளியான செய்திகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், புளொட் தலைவர் த.சித்தார்த்தனும், மறுத்துள்ளனர்.

சிறிலங்கா அதிபர் தேர்தல் – முடிவை அறிவித்தது ஈபிஆர்எல்எவ்

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக பேசவோ, அல்லது ஒரு உடன்பாட்டிற்கு வரவோ மறுக்கின்ற கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு எமது மக்களைக் கோருவதற்கு எமக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என்று, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.