மேலும்

நாள்: 16th November 2019

இப்போது யார்? – முந்தினார் சஜித்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 49 வீத வாக்குகளுடன்  முன்னிலையில் இருந்து வருகிறார்.

வடக்கில் சரிந்தது ராஜபக்சவினர் செல்வாக்கு

வடக்கில் ராஜபக்சவினரின் செல்வாக்கு பெரும் சரிவைச் சந்தித்திருப்பதை, தற்போது வெளியாகியுள்ள இரண்டு தேர்தல் முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தொகுதி வாரியான முடிவுகள் – வடக்கில் சஜித், தெற்கில் கோத்தா வெற்றிமுகம்

சிறிலங்கா அதிபர் தேர்தலின், மாவட்ட தேர்தல் தொகுதி ரீதியான தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்,   யாழ்ப்பாணம், வன்னி மாவட்டங்களின் தொகுதிகளை சஜித் பிரேமதாசவும், தெற்கிலுள்ள தொகுதிகளை கோத்தாபய ராஜபக்சவும் கைப்பற்றி  வருகின்றனர். .

அஞ்சல் வாக்குகள் – வட-கிழக்கில் சஜித், தெற்கில் கோத்தா முன்னிலை

சிறிலங்கா அதிபர் தேர்தலில் அஞ்சல் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளின் முடிவுகள் தற்போது அதிகாரபூர்வமாக வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில், வடக்கு கிழக்கில் சஜித் பிரேமதாசவும், ஏனைய பகுதிகளில்  கோத்தாபய ராஜபக்சவும் முன்னிலை பெற்றுள்ளனர்.

போலி தேர்தல் முடிவுகள் – மகிந்த தேசப்பிரிய எச்சரிக்கை

சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவடைந்து வாக்குகளை எண்ணும் பணி இடம்பெற்று வரும் நிலையில் சமூக ஊடகங்களில் போலியான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருவதாகவும், அவை அதிகாரபூர்வமானவை அல்ல என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

வாக்களிப்பு முடிந்தது – எண்ணும் பணி ஆரம்பம்

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று மாலை 5 மணிக்கு முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் சுமார் 80 வீதமாக வாக்காளர்கள் வாக்களித்திருக்கக் கூடும் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற்பகல் 2 மணி வரை 60 வீதம் வாக்களிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவடைய இன்னும் ஒன்றரை மணி நேரமே உள்ள நிலையில், பிற்பகல் 2 மணி வரை,  60 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  றோகண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

முக்கிய அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் வாக்களித்தனர்

சி்றிலங்கா அதிபர் தேர்தலில்  அரசாங்கத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், வேட்பாளர்கள்  இன்று காலையிலேயே தமது வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.

வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்துகள் மீது துப்பாக்கிச் சூடு

புத்தளத்தில் இருந்து மன்னார் – சிலாவத்துறை நோக்கி வாக்காளர்களை ஏற்றி வந்த இரண்டு அரச பேருந்துகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அதிபர் தேர்தல் – நண்பகல் வரை 50 வீதம் வாக்களிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை முதல் இடம்பெற்று வரும் நிலையில், நண்பகல் வரை சராசரியாக 50 வீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.