எம்சிசி உடன்பாட்டை மகாநாயக்கர்களிடம் வெளியிட்டு பகிரங்கப்படுத்துவோம் – பந்துல
மிலேனியம் சவால் உடன்பாட்டில், சிறிலங்காவுக்கு எதிரான பல விடயங்கள் இருப்பதாகவும், இதுதொடர்பான ஆவணங்களை அதிபர் தேர்தலுக்கு முன்னர், மகாநாயக்க தேரர்களிடம் கையளித்து, நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப் போவதாகவும், எச்சரித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன.