மேலும்

நாள்: 8th November 2019

சிறிலங்கா மாற்றங்களை உன்னிப்பாக கண்காணிக்கும் இந்தியா

அதிபர் தேர்தலுக்கு இன்னமும், 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அண்டை நாடான சிறிலங்காவின் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இவ்வாறு இந்தியாவில் இருந்து வெளியாகும் எகொனமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் ‘பென்டகன்’ – திறந்து வைத்தார் சிறிசேன

பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் புதிய தலைமையகத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை திறந்து வைத்தார்.

8000 ஏக்கர் நிலங்களை அமெரிக்காவுக்கு விற்ற மகிந்த அரசு – அனுரகுமார குற்றச்சாட்டு

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் 8000 ஏக்கர் காணிகள், அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் அதிபர் வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

பிரகீத் கடத்தல் – 7 இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மீது குற்றப்பத்திரம் தாக்கல்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் ஏழு பேருக்கு எதிராக, சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

நாட்டுக்கு பாதகமான உடன்பாடுகளில் கையெழுத்திடமாட்டேன் – கோத்தா

நாட்டின் இறையாண்மையை  பாதிக்கும் எந்தவொரு உடன்பாட்டிலும், கையெழுத்திடுவதற்கு தான் இடமளிக்கமாட்டேன் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர்  கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ். விமான நிலையத்தின் மீது கண்வைக்கிறது சிறிலங்கன் எயர்லைன்ஸ்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து விரைவில் விமான சேவைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதவிக்கு வந்ததும் புதிய பிரதமர் – சஜித் அறிவிப்பு

தாம் பதவிக்கு வந்த பின்னர், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட, புதியவர் ஒருவரை பிரதமராக நியமிப்பேன் என்று புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

கோத்தாவின் பரப்புரைக்கு 750 மில்லியன் செலவு – சஜித் 470 மில்லியன்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்கள், இதுவரை 1257 மில்லியன் ரூபாவை பரப்புரைகளுக்காக செலவிட்டுள்ளனர் என்று,தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் தெரிவித்துள்ளது.